இந்தியா வல்லரசாக உருவாவதை வரவேற்பதாக அமெரிக்கா அறிவிப்பு

0 2852
இந்தியா வல்லரசாக உருவாவதை வரவேற்பதாக அமெரிக்கா அறிவிப்பு

ந்தியா உலகின் முன்னணி வல்லரசாக உருவெடுப்பதற்கும், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு அளிக்கும் சக்தியாகவும் திகழ்வதற்கும் அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் (Ned Price), இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் கூட்டுறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா இடம் பெற்றுள்ளதை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்னும், இந்திய வெளியுறவு அமைசர் ஜெய்சங்கரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மியான்மர் விவகாரம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் பற்றி விவாதித்ததாகவும் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments