ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல்? ட்விட்டரில் இருந்து ‘கூ’ செயலிக்கு மாறும் மத்திய துறைகள் மற்றும் அமைச்சர்கள்

0 3010

விவசாயிகளின் போராட்டம் குறித்த தவறான பதிவுகள் மற்றும் கணக்குகளை முடக்குவது தொடர்பாக டுவிட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ள நிலையில், பல அமைச்சர்களும், அரசு துறைகளும் இந்திய மைக்ரோபிளாக்கிங் செயலியான ’கூ’ விற்கு மாறியுள்ளனர்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாம் ‘கூ’ வுக்கு மாறி விட்டதாக நேற்று தெரிவித்தார். ஐ.டி. அமைச்சரான ரவிசங்கரும் இந்த செயலிக்கு மாறியுள்ள நிலையில், அவரது துறைகளான ஐ.டி, தபால் துறை, டெலிகாம் ஆகியனவும் இந்த செயலிக்கு மாறி உள்ளன.

அதே போன்று மறைமுக வரி விதிப்பு வாரியம், சுங்கத்துறை, MyGovIndia ஆகியனவும் ‘கூ’ வுக்கு மாறி உள்ளன. ட்விட்டரை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ’கூ’ செயலி, கடந்த ஆண்டில், ஆத்மநிர்பர் செயலிகளுக்கான போட்டியில் வெற்றிபெற்றவைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments