6, 7 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 50 சதவீதம் குறைப்பு - பள்ளிக் கல்வித்துறை

0 12943

தமிழகத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு, 50 சதவீதம் அளவுக்கு  குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 11 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக  வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் 9ஆம் வகுப்பு முதல் முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

அவர்களுக்கு 40 சதவீத பாடக்குறைப்பு செய்யப்பட்டதாக் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் 6,7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளைத் தொடங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments