சட்டப்பேரவைக்குள் திமுக எம்.எல்.ஏக்கள் குட்கா கொண்டுவந்த விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்றதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
இந்த வழக்கில் முதலாவதாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பின்னர் இரண்டாவதாக அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும் திமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் வழக்கு தொடர்ந்தனர். 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்றது.
அதில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளிக்கவுள்ளார்.
Comments