இங்கிலாந்தில் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிய குதிரை பத்திரமாக மீட்பு

இங்கிலாந்தில் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிய குதிரை பத்திரமாக மீட்பு
இங்கிலாந்தில் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிய குதிரை நீண்ட முயற்சிக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
வேல்ஸ் பகுதியில் வளர்ப்புக் குதிரை ஒன்று அங்கிருந்து பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தது.
இறுதியில் நெகிழ்வு தன்மை கொண்ட மணல் பகுதிக்கு வந்த அந்தக் குதிரை புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடியது.
இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் முதற்கட்டமாக குதிரை மேலும் முழுகாமல் இருக்க, அதன் கழுத்தில் ரப்பர் வளையத்தைப் பொருத்தினர்.
பின்னர் நீண்ட நேரமாக பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் குதிரை பத்திரமாக மீட்கப்பட்டது.
Comments