அரசு சுட்டிக்காட்டும் கணக்குகளை முடக்குகிறது டிவிட்டர்? அதிர்ச்சி தகவல்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மோதல், வன்முறை உணர்வுகளை தூண்டக்கூடிய பதிவுகள் என மத்திய அரசு புகார் அளித்த ட்விட்டர் கணக்குகளை, ட்விட்டர் நிர்வாகம் முடக்கி வருகிறது.
இதுவரை 709 கணக்குகளை டுவிட்டர் முடக்கி உள்ளது. இவற்றில் 583 கணக்குகளுக்கு காலிஸ்தான் அல்லது பாகிஸ்தான் சக்திகளின் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஏற்கெனவே ஐ.டி. சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தனது உயர் அதிகாரிகள் மீது மத்திய அரசு பெரும் அபராதம் விதிக்கும் அல்லது சட்ட நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, ட்விட்டர் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய ட்விட்டர் கணக்குகளின் உள்ளடக்கத்தை மறுபரிசீலனை செய்யத்தயார் எனவும் மத்திய அரசுக்கு ட்விட்டர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
Comments