முதலையின் பிடியிலிருந்து தப்பி சிறுத்தைக்கு இரையான மான்... எங்கிருந்த போதும் மரணம் வந்தே தீரும் என்ற விதி நிஜமானது

தென் ஆப்பிரிக்காவில் முதலையின் கொடூரப் பிடியில் இருந்து தப்பிய மான் ஒன்று அடுத்த நொடியே சிறுத்தையால் வேட்டையாடப்பட்டது. குரூகர் தேசியப் பூங்காவில் நீர் குடித்துக் கொண்டிருந்த இம்பாலா வகை மானை முதலை நீருக்குள் இழுத்துச் சென்றது.
முதலையின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க இம்பாலா போராடிக் கொண்டிருந்த நேரத்தில் தனது பிடியை வலுவாக்க முதலை வாயைத் திறந்த நொடிக்கும் குறைவான நேரத்தில் அங்கிருந்து இம்பாலா தப்பியது.
ஆனால் எங்கிருந்த போதும் மரணம் வந்தே தீரும் என்ற விதிக்கு ஏற்ப மறைந்திருந்த சிறுத்தை அதே இம்பாலாவை தனக்கு இரையாக்கிக் கொண்டது.
Comments