இயற்கையாகவே தானாக உருவான பனி எரிமலை... மக்கள் ஆச்சரியம்!

கஜகஸ்தான் நாட்டில் தானாக உருவான பனி எரிமலையை பலரும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
அந்நாட்டில் தற்போது உறைபனிக் காலம் நிலவுவதால் பார்க்கும் இடங்கள் எல்லாம் வெண்ணிறமாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில் அல்மாட்டி என்ற இடத்தில் சுமார் 45 அடி உயரத்திற்கு தானாக உருவான பனி எரிமலை ஒன்று லாவாவுக்குப் பதிலாக புகை போன்று பனியை வெளிட்டு வருகிறது.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் வெளியேறிய நீர் காலநிலை காரணமாக உறைந்து பனியாக மாறியதும், மேலும் வெளியேறும் நீரும் புகைபோன்று மாறுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
Comments