சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடமிருந்து மேலும் 1.45 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பு மருந்து வாங்க மத்திய அரசு முடிவு

0 693
சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடமிருந்து மேலும் 1.45 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பு மருந்து வாங்க மத்திய அரசு முடிவு

சீரம் இந்தியா நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து மேலும் ஒரு கோடியே 45 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி டோஸ்கள் கோவிஷீல்டு மருந்தும், பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 45 லட்சம் டோஸ்கள் கோவாக்ஸின் மருந்தும் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இரு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக இவ்விரு நிறுவனங்களிடம் இருந்து ஏற்கனவே ஒரு கோடியே 10 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments