கொட்டப்படும் குப்பைகள் - மாசடையும் புத்தேரி; ஒரு மாதத்துக்கு முன் பொருத்தப்படும் எனக் கூறிய சிசிடிவி கேமராக்கள், பொருத்தாதது குறித்து கேட்ட போது கோப்பட்ட நகராட்சி ஆணையர்

0 888
சென்னை பல்லாவரம் புத்தேரியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்து ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

சென்னை பல்லாவரம் புத்தேரியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்து ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

பல்லாவரம் புத்தேரியில் குப்பைகளை கொட்டிச் செல்வதால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

அங்கு குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் ஏரியைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என நகராட்சி ஆணையர் மதிவாணன் ஒரு மாதத்துக்கு முன் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அதுகுறித்து நகராட்சி ஆணையர் மதிவாணனிடம் கேட்டபோது, நாங்களா அங்கு பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுகிறோம் என கோபமாக கேள்வி எழுப்பினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments