‘என்னைப் போல சிறந்த நடிகை உண்டா?’ - கங்கனா ரனாவத் சவால்!

0 3355
ஹாலிவுட் நடிகைகளான மெரில் ஸ்டிரீப் மற்றும் கால் கேடட் ஆகியோருக்கு இணையாகத் தன்னிடம் திறமைகள் உள்ளதாக ட்விட்டரில் சுய தம்பட்டம் அடித்துள்ளார் கங்கனா ரனாவத்.


ஹாலிவுட் நடிகைகளான மெரில் ஸ்டிரீப் மற்றும் கால் கேடட் ஆகியோருக்கு இணையாகத் தன்னிடம் திறமைகள் உள்ளதாக ட்விட்டரில் சுய தம்பட்டம் அடித்துள்ளார் கங்கனா ரனாவத்.

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்தி நடிகையும் மாடல் அழகியுமான கங்கனா ரனாவத் 2006 ம் ஆண்டிலிருந்து நடித்து வருகிறார். தமிழில் தாம் தூம் எனும் திரைப்படத்தில் மட்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து பிறகு காணாமல் போய்விட்டார். தற்போது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா குறித்த சுயசரிதை திரைப்படமான தலைவி எனும் படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். அத்துடன் தகாட் எனும் ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான், தலைவி மற்றும் தகாட் ஆகிய திரைப்படங்களின் போஸ்டர்களுடன், தன்னுடைய நடிப்புத் திறமை பற்றி, “ஒரு நடிகையாக நான் வெளிப்படுத்தும் திறமை தற்போது உலகில் வேறு எந்த நடிகையிடமும் இல்லை. பல்வேறு விதமான நடிப்பில் மெரில் ஸ்டிரீப் போலவும் ஆக் ஷன் மற்றும் கவர்ச்சியில் கால் கேடட் போலவும் திறமையை வெளிப்படுத்துகிறேன். இந்த உலகில் என்னை விடவும் திரைப்படக் கலையில் வித்தியாசமான, மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் இன்னொரு நடிகை உண்டா? அப்படிக் காட்டினால் எனது ஆணவத்தை விட்டுவிடுகிறேன். அதுவரை நான் பெருமிதத்துடன் தான் இருப்பேன்” என்று ஏகத்தும் தன்னைப் பற்றிப் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார் கங்கனா ரனாவத்.

இதை நெட்டிசன்கள் பலரும் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர். பர்சனாலிட்டி டிசார்டர் எனப்படும் narcissistic delusion நோயால் அதிதீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களைக் குறிக்கும் விதமாக ஆங்கில அகராதியில் கங்கனாய்சம் எனும் புதிய வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என்றும் உங்களிடம் தன்னடக்கம் அதிகமாக உள்ளது என்று வஞ்சகப் புகழ்ச்சியாகவும் நெட்டிசன்கள் பதில் கூறி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments