விசுவாசமாக இருக்க வேண்டும்.! தொண்டர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை.!

பயிர் கடன் தள்ளுப்படிக்கான ரசீது 15 நாட்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சிக்கும், தலைமைக்கும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அரக்கோணம், கையனூர், சோளிங்கர் பாண்டியநல்லூர், இராணிப்பேட்டை முத்துக்கடை, அணைக்கட்டுத் தொகுதிக்கு உட்பட்ட கந்தனேரி, கே.வி.குப்பம் தொகுதி சென்றாம்பள்ளி, வேலூர் அண்ணா கலையரங்கம் ஆகிய பகுதிகளில், பொதுமக்கள், அதிமுகவினர், இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர், மகளிர் உள்ளிட்டோர் மத்தியில், கலந்துரையாடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பரப்புரை மேற்கொண்டார்....
வரும் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குள், வேளாண் கடன் தள்ளுபடிக்கான ரசீது விவசாயிகளிடம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
அரசின் திட்டங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே மக்கள் மத்தியில் விளம்பரம் செய்யப்படுகிறது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் முழுமையாக திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பத்தலப்பள்ளி அணை பணி, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Comments