கிருபானந்த வாரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதலமைச்சர்

0 4409

திருப்புகழ் ஜோதி என புகழப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வேலூர் அண்ணா கலையரங்க பகுதியில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர், கிருபானந்த வாரியாருக்கு புகழ் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகே, காங்கேயநல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார்.

சிறந்த முருக பக்தரான கிருபானந்தர், எளியோரும் புரியும் வண்ணம், ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதில், தன்னிகரற்று விளங்கினார். சமயம், இலக்கியம், பேச்சு, இசை உட்பட பல துறைகளில் ஆழ்ந்த புலமையுடன் விளங்கியவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments