வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்களில் பணமும், மதுவும் பாய்ந்தோடுகிறது - சென்னை உயர்நீதிமன்றம்

0 1199
வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்களில் பணமும், மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்களில் பணமும், மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சேலம் வழக்கறிஞர் சங்கத் தேர்தலை நடத்த மூவர் அடங்கிய சிறப்பு குழுவை நியமித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

பார் கவுன்சில் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வேணுகோபாலை தேர்தல் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டனர்.

வழக்கறிஞர்கள், மதுபானத்திற்கு தங்களை விற்று விடுவதாகவும், சட்டமன்றத் தேர்தலுக்கும், வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments