உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவுதான் காரணம் - இஸ்ரோ விஞ்ஞானிகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவுதான் காரணம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவுதான் காரணம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
அந்த மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணம் குறித்து இஸ்ரோவின் தொலை உணர்வு ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்கள் மூலமாக ஆய்வுகளை மேற் கொண்டனர். அப்போது பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை.
பனிச்சரிவு ஏற்பட்ட இடம் கடல் மட்டத்திற்கு மேல் 5,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது என்றும், சுமார் 14 கி.மீட்டர் சுற்றளவுக்கு பனிச்சரிவு ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் 3 கோடி கியூபிக் மீட்டர் தண்ணீர் ஒரே நேரத்தில் வெளியேறியதால்,பெரிய வெள்ளம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments