அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து - அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து - அரசாணை வெளியீடு
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் மீதான வழக்குகள் கைவிடப்படும் என கடந்த வாரம் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அதற்கான அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசு,வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் மீது நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்படுமென தெரிவித்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைகளில் தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் இருப்பின் அவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், குற்றவியல் நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments