சென்னையிலிருந்து - கோவை சென்ற விரைவு ரயிலில் 3 கிலோ தங்க நகைககள் பறிமுதல்

சென்னையிலிருந்து - கோவை சென்ற விரைவு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில், சேலம் ரயில் நிலையத்திற்கு வந்த போது, இறங்கிய இரண்டு நபர்கள் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும், 3 கிலோ தங்க நகைகளை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்த ரயில்வே போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
Comments