ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த படங்களுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடர்ந்த இவ்வழக்கு, நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைவி என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே படம் எடுக்கப்பட்டுள்ளதால் தீபாவிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என இயக்குநர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Comments