அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாக பொய் பரப்புரை செய்த வழக்கில் நாரதர் மீடியாவைச் சேர்ந்த இருவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

0 1306
குறிப்பிட்ட சமூகம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாக பொய் பரப்புரை செய்த வழக்கில் நாரதர் மீடியாவைச் சேர்ந்த 2 பேரிடம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பிட்ட சமூகம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாக பொய் பரப்புரை செய்த வழக்கில் நாரதர் மீடியாவைச் சேர்ந்த 2 பேரிடம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக, கடந்த 7ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பிய இணையதள முகவரியை கண்டறிந்த சைபர் கிரைம் போலீசார், அதன் அடிப்படையில் நாரதர் மீடியாவைச் சேர்ந்த 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments