மதுரைனாலே பாசக்காரங்கதானே... வீட்டுக்குள் வளர்ப்பு நாய்க்கு சமாதி கட்டிய தம்பதி!

0 13016
மணிக்கு வீட்டுக்குள் கட்டப்பட்ட சமாதி

பாசக்காரங்க நிறைந்த மதுரையில் ஒரு தம்பதி தங்கள் வீட்டில் வளர்த்து வந்த செல்ல நாய் இறந்ததையொட்டி அதற்கு சமாதி கட்டி வழிபட்டு வருகின்றனர்.

மதுரை பெத்தானியாபுரம் அகஸ்தியர் தெருவில் வாசகர் ராஜா - விஜயா தம்பதி வசித்து வருகின்றனர். வாசக ராஜா மாநகராட்சியில் மதுரை வேலை பார்த்து வந்தார். சில ஆண்டுகளுக் முன்பு தன் நண்பரின் வீட்டில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் நாய்க்குட்டியை தன் வீட்டுக்கு எடுத்து வந்து அதற்கு மணி என்று பெயரிட்டு வாசகராஜா வளர்த்தார். கடந்த 5 வருடங்களாக வீட்டில் ஒரு குழந்தை போல் மணி வளர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் சுட்டித்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்த மணிதான் இந்த தம்பதிக்கு எல்லாமுமாக மாறிப் போனது. நாய்க்கு என்று தனியாக தங்கச் செயினும் செய்து அதன் கழுத்தில் அணிவிந்து தம்பதியினர் அழகு பார்த்து வந்தனர்.

image

இந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு மணி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்தும் பலன் தரவில்லை. தன்னை தாய் போல வளர்த்த விஜயாவின் மடியிலேயே மணி உயிரை விட்டுவிட்டது. நாய் இறந்து போனதால், மிகுந்த மன வருத்தமடைந்த அந்த தம்பதி, அதன் சடலத்தை மணி உறங்கும் இடத்திலேயே புதைத்தனர். பின்னர், அதன் நினைவாக தங்கள் வீட்டுக்குள்ளே சமாதி எழுப்பி  அது பயன்படுத்திய பெல்ட், தங்கச் செயினை வைத்து தினமும் வழிபட்டு வருகின்றனர். மணியின் சமாதியின் மீது, அதன் உருவ படமும் பொறிக்கப்பட்டுள்ளது. தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கு சமாதி கட்டிய தம்பதி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments