லாரி மீது கார் மோதிய விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 5 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பேர் உயிரிழந்தனர்.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த சுப்பிரமணி தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்குச் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். அத்திமானம் என்ற இடத்தில் பார்க்கிங் யார்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைய முயன்ற லாரி மீது இவர்களது கார் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் சுப்பிரமணி, அவரது குடும்பத்தினர்,கார் ஒட்டுநர் என 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Comments