ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் 4வது நாளாக போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம், ஜனநாயக ஆட்சி தான் வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த இராணுவம் முயற்சி செய்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்து வருகின்றனர். மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
Comments