மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்திற்கு கால்நடைகள் கடத்தப்பட்ட வழக்கு : பிஎஸ்எப் அதிகாரி சதீஷ்குமாரை சிபிஐ அதிகாரிகள் கைது

0 722
மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்திற்கு கால்நடைகள் கடத்தப்பட்ட வழக்கு : பிஎஸ்எப் அதிகாரி சதீஷ்குமாரை சிபிஐ அதிகாரிகள் கைது

கால்நடை கடத்தல் வழக்கில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி உள்பட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து முர்ஷிதாபாத் மற்றும் மால்டா வழியாக வங்கதேசத்திற்கு கால்நடைகள் கடத்தப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் கால்நடை கடத்தல்காரர்களுடன் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியான சதீஷ் குமார் என்பவர் தொடர்பு வைத்து பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் எல்லைப் பாதுகாப்புப் படையின் 36வது பட்டாலியனைச் சேர்ந்த கமாண்டன்ட் சதீஷ் குமார் உள்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments