டெல்லி வன்முறை : தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது

0 1805

டெல்லியில் டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில், தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த மோதல், செங்கோட்டையில் சீக்கிய மத கொடியை ஏற்றியது போன்ற சம்பவங்களில் தீப் சித்து இடம்பெற்றிருந்தது வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. தீப் சித்து உள்பட 8 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.

பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தீப் சித்துவை போலீசார் தேடி வந்த நிலையில், திங்கட்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments