ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் வெற்றி

0 1373
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் வெற்றி

ஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் ஜெர்மனியின் லாரா சிஜ்முன்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் , பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் டொமினிக் திம் , கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments