டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிவுகள் அறிவியலை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிவுகள் அறிவியலை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுகள் அனைத்தும் அறிவியலை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பைடன், திட்டமிட்டபடி விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்று நம்புவதாக கூறினார்.
போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் அனைவரும் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு டோக்கியோவில் ஜூலை 23ந்தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது.
Comments