இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான ஊழல் வழக்கு : ஜெருசலேம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பம்

இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான ஊழல் வழக்கு : ஜெருசலேம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பம்
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு எதிரான ஊழல் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நண்பர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பொருள்களைப் பரிசாகப் பெற்றதாகவும், அந்த நாட்டு நாளிதழ்களில் தனக்கு சாதகமாக செய்திகளை பிரசுரிக்கச் செய்வதற்காக வர்த்தக உதவிகள் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் என 3 மிகப்பெரிய வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை விசாரித்த ஜெருசலேம் நீதிமன்ற நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Comments