விஜயநகர் புதிய மாவட்டமாக உதயம்: அரசாணை பிறப்பித்தது கர்நாடக அரசு

0 3295

பல்லாரியை 2 ஆக பிரித்து விஜயநகர் மாவட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி விஜயநகர் மாவட்டத்தில் ஒசப்பேட்டை,கூட்லகி, ஹகிரிபொம்மனஹள்ளி, கொட்டூர், ஹூவினஹடகலி, ஹரப்பனஹள்ளி ஆகிய தாலுகாக்கள் இடம் பெறும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய மாவட்டத்தின் அண்டை மாவட்டங்களாக சித்ரதுர்கா, பல்லாரி, கொப்பல், கதக், ஹாவேரி, தாவணகெரே ஆகியவை இருக்கின்றன. பல்லாரி மாவட்டத்தில் பல்லாரி, குருகோடு, சிரகுப்பா, கம்பளி, சன்டூர் ஆகிய தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments