கொரோனா - 7 புதிய அறிகுறிகள் - இங்கிலாந்து மருத்துவ அதிகாரிகளின் பீதி கிளப்பும் ஆய்வு முடிவுகள்

0 15604

தசை மற்றும் மூட்டு வலி இருந்தால், அது கூட கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று இங்கிலாந்து மருத்துவ அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும்,அது குறித்த பீதி கிளப்பும் ஆய்வு முடிவுகள் இன்னும் குறைந்தபாடில்லை.

இதுவரை, இருமல், காய்ச்சல், சுவை மற்றும் மணம் குறித்த உணர்வில்லாமை ஆகியவை தான் முக்கிய அறிகுறிகளாக கருதப்பட்ட நிலையில்,  வறண்ட தொண்டை, தசை மற்றும் மூட்டு வலி, வயிற்றுப்போக்கு, விழி வெண்படல அழற்சி, தலைவலி, தோல் அழற்சி மற்றும் கை- கால் விரல்களின் நிறம் மாறுதல் போன்ற அறிகுறிகளும் தொற்றாக இருக்கலாம் என இங்கிலாந்து மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments