குஜராத் ஒருபோதும் மேற்கு வங்கத்தை ஆள முடியாது - மம்தா பானர்ஜி

0 1367

மத்திய அரசு குரூர மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், குஜராத் ஒருபோதும் மேற்கு வங்கத்தை ஆளமுடியாது என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 

சட்டமன்றத்தில் பேசிய அவர், பாஜகவினருக்கு வங்கத்தைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில் அங்கு பிரச்சாரத்துக்கு வருவதாகக் குறிப்பிட்டார். அம்பன் புயல் மற்றும் கொரோனா நிலைமையைச் சமாளிக்க 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டதாகக் தெரிவித்தார்.

பிரதமரின் விவசாயிகள் தொடர்பான திட்டத்தில் சேர்ப்பதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளின் பெயர்களை தாங்கள் மத்திய அரசுக்கு அனுப்பியதாகக் குறிப்பிட்ட மம்தா, அவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments