24 நாட்களில் 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை..!

24 நாட்களில் 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை..!
உலக அளவில் குறுகிய நாட்களில் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 60 லட்சத்து 35 ஆயிரத்து 660 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையைத் தொடுவதற்கு அமெரிக்காவுக்கு 26 நாட்களும், இங்கிலாந்துக்கு 46 நாட்கள் ஆனதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments