சபரிமலையில் மாசி மாத பூஜைக்காக வரும் 12ந்தேதி நடை திறப்பு...

சபரிமலையில் மாசி மாத பூஜைக்காக வரும் 12ந்தேதி நடை திறப்பு...
சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்கு தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. 13ம் தேதி முதல் 17ந்தேதி வரை 5 நாட்கள் மாத பூஜைகள் நடக்கின்றன.
இந்த நாட்களில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கேரள அரசுக்கு திருவிதாங்கூர் தேவஸம்போர்டு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் இதனை அனுமதிக்க சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Comments