சசிகலாவுக்கு அதிமுக கொடி போட்ட கார் கொடுத்த நிர்வாகி நீக்கம்: அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சசிகலாவுக்கு அதிமுக கொடி போட்ட கார் கொடுத்த நிர்வாகி நீக்கம்: அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
தமிழக எல்லைக்குள் அதிமுக கொடி போட்ட காருடன் சசிகலா நுழைய உதவியதாக கூறப்படும் அக்கட்சியின் நிர்வாகி சூளகிரி சம்பங்கி என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி, இவருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, சூளகிரி ஆனந்த் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் தட்சிணா மூர்த்தி உள்ளிட்ட 7 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments