வங்கதேசத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

0 848
வங்கதேசத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

ங்கதேசத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை அந்நாட்டு அரசு தொடங்கியது.

இந்தியாவிடமிருந்து சுமார் 50 லட்சம் கோவிசீல்டு தடுப்பூசி டோஸ்களை வங்கதேச அரசு அண்மையில் வாங்கியதை அடுத்து, தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜாகித் மாலிக், கடந்த வாரம் தடுப்பூசி போடப்பட்ட 567 முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனக் கூறினார்.

தானும் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக தெரிவித்த அவர், அனைத்து மக்களும் பயப்படாமல் தடுப்பூசி போட்டுகொள்ள முன்வர வேண்டும் என கேட்டுகொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments