கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணையை வெளியிட்டது கூட்டுறவுத் துறை

0 9427
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணையை வெளியிட்டது கூட்டுறவுத் துறை

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், விதி எண் 110ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணைகள் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வழங்குவார் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments