இரண்டாவது நாளாகத் தொடர்ந்த சாய ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி

0 1464
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுகளைக் கலக்கும் சாய ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுகளைக் கலக்கும் சாய ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.

மொடக்குறிச்சி மற்றும் வெண்டிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சில சாய ஆலைகள், சாயக்கழிவு நீரை காலிங்கராயன் வாய்க்காலில் கலப்பதாக புகார் எழுந்தது.

அங்கு நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், சாயக்கழிவுகளைக் கலப்பதற்காக பதிக்கப்பட்டிருந்த குழாய்களை அகற்றினர். தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்கி வந்த முல்லை நிதி டெக்ஸ், பச்சியம்மன் டெக்ஸ், போனிக்ஸ் டெக்ஸ் பிராசசிங் உட்பட 30க்கும் மேற்பட்ட சாய ஆலைகளுக்கு நேற்று சீல் வைத்தனர்.

இரண்டாவது நாளாக இன்று விக்னேஷ் ப்ளீச்சிங் பேக்டரி, விக்னேஷ் பிராசசிங் பேக்டரி, புஷ்பம் டெக்ஸ்டைல் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments