நள்ளிரவில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு

மகாராஷ்டிராவின் தானே பகுதியில், நள்ளிரவில் வண்டியில் வைக்கப்பட்டு இருந்த சிலிண்டர்கள், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்குள்ள ராம் நகரின் ஒரு மைதானத்தில் சிலிண்டர்கள் டெலிவரி செய்யும் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவில் திடீரென அதில் உள்ள 6 சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதனால் ஏற்பட்ட தீயானது, பல அடி தூரம் மேலே எழும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் காயமடைந்த நிலையில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
Comments