திமுக ஆட்சி அமைந்த உடன் சமத்துவபுரம் மேலும் விரிவுபடுத்தப்படும் -மு.க.ஸ்டாலின்

0 1216

திமுக ஆட்சி அமைந்த உடன் சமத்துவபுரம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள N. வைரவன்பட்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலினுக்கு வெள்ளி வாள் வழங்கப்பட்டது.

அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஸ்டாலின், திமுக ஆட்சி வந்தவுடன் 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றார். புகார் மனு வழங்கிய அடையாள அட்டையை கோட்டைக்குள் கொண்டு வரலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

திமுக ஆட்சி அமைந்த உடன் சமத்துவபுரம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். முல்லைபெரியாறு அணையில் இருந்து உரிய பங்கீட்டு நீரை அனைத்து பகுதிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார். 

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து உரையாற்றிய ஸ்டாலின், இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்து மூன்றாவது கட்ட பிரச்சாரத்தை வரும் 12ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments