குடும்பத் தகராறில் 2வது மனைவியை அரிவாளால் வெட்டிய பா.ஜ.க பிரமுகர் கைது

0 761

மதுரை சமயநல்லூரை அடுத்த தோடனேரியில், குடும்பத் தகராறில் 2வது மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

முத்துப்பாண்டி என்பவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இருவருக்குமிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததை அடுத்து, கணவர் முத்துப்பாண்டி மீது புவனேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், புவனேஸ்வரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் காயமடைந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments