தாம்பரம் - திண்டிவனம் இடையேயான சாலை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 799

தாம்பரம் முதல் திண்டிவனம் வரை சாலையின் நிலை குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இவ்வழித்தடத்தில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரி, திருச்சி வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இவ்விரு சுங்கச்சாவடி களின் ஒப்பந்த காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்டதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை 6 வாரத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர், 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments