இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ’பிளேயர் ஆப் தி மந்த்’ விருதுக்கு தேர்வு

0 1739
ஜனவரி மாதத்திற்கான பிளேயர் ஆப் தி மந்த் விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தேர்வாகியுள்ளார்.

ஜனவரி மாதத்திற்கான பிளேயர் ஆப் தி மந்த் விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தேர்வாகியுள்ளார்.

சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதந்தோறும் கௌரவிக்கும் விதமாக, பிளேயர் ஆப் தி மந்த் விருது வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஆஸிதிரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிட்னியில் 97 ரன்களும், பிரிஸ்பேனில் 89 ரன்களையும் சேர்த்து இந்திய வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரிஷப் பந்த் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கணையாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பந்துவீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments