திண்டிவனம் : தூக்கக்கலக்கத்தில் காரை ஓட்டி வந்ததால் விபத்து, சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு : திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் நேர்ந்த சோகம்

0 1978

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில், பெண் வேளாண் அலுவலர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னையைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர், தனது மனைவியும் வேளாண் அலுவலருமான இந்துமதி, 11ஆம் வகுப்புப் படிக்கும் மகன் முகில், சகோதரர் குருநாதன் ஆகியோரோடு, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு மாருதி சுசூகி பலீனோ காரில் சென்ன திரும்பிக் கொண்டிருந்தார்.

திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தின் அருகே வரும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியதில் 4 பேரும் பலியாயினர். காரை செந்தில்நாதன் தூக்கக்கலக்கத்தில் ஓட்டி வந்ததால் விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments