106 வயதிலும் பியானோ வாசித்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மூதாட்டி..!

0 726

பிரான்ஸ் நாட்டில் 106 வயது மூதாட்டி ஒருவர் பியானோ வாசிக்கும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாரிஸ் நகரில் வசித்து வரும் Colette Maze என்ற மூதாட்டி தனது 106 வயதிலும் தளராது பியானோ வாசித்து தனது 6வது இசை தொகுப்பை வெளியிட உள்ளார்.

இசை மீது அலாதி ஆர்வம் கொண்ட மூதாட்டி, தன்னுடைய 4 வயது முதலே பியானோ வாசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சோகம், சந்தோஷம் என அனைத்து நேரங்களிலும் பியானோ வாசித்து தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments