கன்னியாகுமரியில் செயின் பறிக்க எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளி கொலை செய்த நபர் கைது

கன்னியாகுமரியில் செயின் பறிக்க எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளி கொலை செய்த பிரபல ரவுடியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரியில் செயின் பறிக்க எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளி கொலை செய்த பிரபல ரவுடியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பூந்தோப்பைச் சேர்ந்த மேரிஜெயா என்பவர் மூளகுமூடு பகுதியிலுள்ள ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மெர்லின்ராஜா என்பவர் தனது கூட்டாளியுடன் சென்று அவரிடம் செயினை பறிக்க முயன்றுள்ளார்.
இதனை அடுத்து மேரிஜெயா கூச்சலிடவே, அவரை குளத்தில் தள்ளி கொலை செய்து விட்டு அவர்கள் தப்பியோடியதாகக் கூறபடுகிறது.
அப்போது, மெர்லின் ராஜாவை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
குளத்தில் இருந்து மேரிஜெயா உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments