இட ஒதுக்கீடு கொள்கையை மறுப்பது எரிமலையுடன் விளையாடுவதற்கு சமம் - மு.க.ஸ்டாலின்

இடஒதுக்கீடு கொள்கையை மறுப்பது, எரிமலையுடன் விளையாடுவதற்கு சமமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு துறைகளில் இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர் பதவிகளுக்கு தனியார் துறையில் இருந்து ஆள் எடுக்க முடிவு செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையிலிருந்து ஆட்கள் நியமனம் செய்யும் போது இடஒதுக்கீட்டுக் கொள்கை தூக்கி எறியப்படும் என்ற ஸ்டாலின், இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின, பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடை முழுமையாக அமல்படுத்திடவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments