சசிகலாவுக்கு உதவிய எட்டப்பன்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலாவுக்கு அதிமுக கொடி கட்டிய கார் கொடுத்து உதவியவர்கள் எட்டப்பர்கள் என விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார், சம்மந்தப்பட்டவர்கள் களை எடுக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
சென்னை மண்ணடி பள்ளியில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விலை இல்லா சைக்கிள் விநியோகிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்றும், கட்சித் துண்டு போட்டவர் எல்லாம் கட்சி உறுப்பினராக முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். சசிகலாவின் வருகையால் தங்களுக்கு எந்த பயமும் இல்லை என கூறிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் B டீம்தான் சசிகலா என விமர்சித்தார்.
Comments