வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட்: தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயார் - முதலமைச்சர்

0 2689

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெள்ளப் பெருக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள துயரச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக மக்களின் சார்பிலும், அரசின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments