ஜாதி மதம் கடந்து 2000 பேருக்கு நடந்த கறி விருந்து... வியக்க வைக்கும் மலைவாழ் மக்களின் வழிபாடு!

0 1172

ராசிபுரம் அடுத்த போதமலை கள்ளவலி கருப்பனார் கோவிலில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த 2000 பேருக்கு கிடா வெட்டி சமபந்தி விருந்து நடத்திய சம்பவம் பலரையும் வியப்படைய செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி ஒட்டியுள்ள போதமலை தொடர்ச்சியில் பிரசித்தி பெற்ற கள்ளவலி கருப்பணார் கோவில் உள்ளது. மழைவாழ் மக்களுக்கான இந்த பிரசத்தி பெற்ற கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபட வேண்டும் என்ற வழக்கம் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் மழைவாழ் சமூகத்தை சேர்ந்தவர்களே பிரசத்தி பெற்ற இக்கோவிலின் பூசாரியாகவும் உள்ளனர் என்பது தனிச்சிறப்பு.

இங்கு வருடம்தோறும் தைமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி சமபந்தி விருந்து வைக்கப்படுவது வழக்கம். இதையொட்டி இந்த வருடத்திற்கான சமபந்தி விருந்துக்கான பூஜைகள் ஞாயிறன்று தொடங்கியது. கடந்த ஆண்டு தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை பலியிட காணிக்கையாக கொடுத்தனர். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையின் முடிவில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 20 ஆட்டு கிடாக்கள், 11 பன்றிகள், 18 சேவல்கள் அறுத்து முப்பூஜை செய்யப்பட்டது.

இதனையடுத்து பசிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையல் வேலைகள் தொடங்கியது. சுமார், 1000 கிலோ கறி சமைக்கப்பட்டது. தொடர்ந்து பலதரப்பட்ட சமூகத்தையும் சேர்ந்த, 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டு சென்றனர். மலைவாழ் சமூகத்தின் ஆண்கள் மட்டுமே வழிபடும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த மக்கள் விருந்துண்டு மகிழ்ந்தது பலரையும் வியப்படைய செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments