ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் வலுப்பெறும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம், ஜனநாயக ஆட்சி தான் வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த களமிறங்கியுள்ள இராணுவம், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கலைத்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய போராட்டம் மியான்மரில் வெடித்துள்ளது.
Comments