விழுப்புரத்தில் பெட்ரோல் போடுவது போல் நடித்து ஊழியர்களை மிரட்டி கத்திமுனையில் கொள்ளை
விழுப்புரத்தில் பெட்ரோல் போடுவது போல் நடித்து ஊழியர்களை மிரட்டி கத்திமுனையில் கொள்ளை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பெட்ரோல் போடுவது போல் நடித்து கத்திமுனையில் ஊழியர்களை மிரட்டி மர்மநபர்கள் பணத்தை பறித்து செல்லும் சிசிடிவி காட்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி செல்லும் சாலையிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒருவன், 500 ரூபாய் நோட்டை கொடுத்து பெட்ரோல் கேட்டதையடுத்து, ஊழியர் சுரேஷ் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில், அவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பையில் வைத்திருந்த 36 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றான்.
மற்றொருவன், கேசியர் அறையிலிருந்த செந்திலை கத்தியை காட்டி மிரட்டி இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
Comments